• Dec 26 2024

முதியோர் இல்லத்துக்கு பெட்டியுடன் கிளம்பிய ஈஸ்வரி.. தலையில் துண்டைப் போட்ட கோபி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கமலாவும் ஈஸ்வரியும் வாக்குவாதத்தில் ஈடுபட, கோபி கொஞ்சம் அமைதியா இருங்கம்மா.. நீங்க  தான் கோபப்படுறீங்க, உங்களால என்ட பிசினஸ் போய் நீங்க சொன்ன மாதிரி ஓட்டாண்டியா நடு தெருவுல நிக்க போறேன் என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் உன்ன நம்பி எங்க வீட்ல போக வேணாம் என்று சொன்னாங்க, இங்க வந்தது என் தப்பு தான், திரும்பவும் அந்த வீட்டுக்கு போனா மரியாதை இருக்காது. அதனால நான் அனாதை ஆசிரமத்துக்கு போக போறேன் என்று சூட் கேஸை தூக்கிக்கொண்டு கிளம்புகிறார் ஈஸ்வரி. இதை பார்த்து ஷாக்கான கோபி, ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்டு அவரை தடுத்து நிறுத்துகிறார்.

மறுபக்கம் அமிர்தாவுக்கும் ஜெனிக்கும் வேலைகளை பிரித்துக் கொடுத்துவிட்டு பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு கிளம்ப, எழிலும்  ராமமூர்த்தியும் ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லு உடனே வருவோம் என்று சொல்லி அனுப்பி வைக்கின்றார்கள்.


இன்னொரு பக்கம் கோபி தலையில் துண்டைப் போட்டு இருக்க அங்கு வந்த ராதிகா, இதற்கெல்லாம் ஒரே தீர்வு உங்க அம்மாவை உங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க. உங்களுக்கு எப்போல்லாம்  பாக்கணும் என்று தோணுதோ அப்ப போய் பாத்துட்டு வாங்க என்று சொல்ல, அது மட்டும் என்னால் முடியவே முடியாது என்று கோபி சொல்லுகிறார்.

அதன்பின் ஈஸ்வரி ரூமில் இருக்க அவருக்கு காபி கொடுக்க அவர் குடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறார். ஆனாலும் கோபி அவரை  சமாதானம் செய்து குடிக்க வைக்கிறார். மேலும் உனக்காக எல்லாம் கழட்டி கொடுத்தவ நான். ஆனா என்னை நீ இப்படி சொல்லிட்ட என வருத்தப்பட்டு பேசி, இனி என்ன நடந்தாலும் உனக்கு போன் பண்ண மாட்டேன் என்று சொல்லுகிறார் ஈஸ்வரி.

இறுதியாக நீங்க உங்க பிசினஸ மட்டும் பாருங்க நான் இங்க என்ன நடந்தாலும் சமாளிக்கிறேன் என ராதிகா சொல்லுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement