• Dec 26 2024

கோடிக்கணக்கில் பணம் இருந்தும் கரண்ட் பில் கட்டலையா? தமன்னாவின் அதிர்ச்சி வீடியோ

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா தனக்கு ஒரு டெலிபோன் கால் வந்ததாகவும் அதில் நீங்கள் கரண்ட் பில் கட்டவில்லை, உடனடியாக கட்டவில்லை என்றால் கரண்டை கட் பண்ணி விடுவோம் என்று கூறியதாகவும் வெளியிட்டுள்ள வீடியோ விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை தமன்னா ஒரு படத்திற்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நிலையில் அவர் ஒரு சில ஆயிரங்கள் அல்லது லட்சங்கள் மட்டுமே வரும் கரண்ட் பில்லை கட்டவில்லை என்று மின்சார துறையில் இருந்து போன் பேசியதாகவும் ஆனால் தமன்னா தான் ஏற்கனவே கரண்ட் பில் கட்டி விட்டதாகவும் கூறியதாக வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ஆனால் தமன்னா சொன்னதை காதில் வாங்காமல் போன் செய்தவர் மீண்டும் உங்கள் மொபைலுக்கு ஒரு லிங்கை அனுப்பியுள்ளோம் அதை கிளிக் செய்து உடனடியாக கரண்ட் பில் கட்ட வேண்டும், இல்லாவிட்டால் கரண்டை கட் பண்ணி விடுவோம், அது மட்டும் அல்ல ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிப்போம் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே கரண்ட் பில் கட்டிவிட்ட நிலையில் எதற்காக நான் திரும்ப கட்ட வேண்டும் என்று தமன்னா கேட்க, மீண்டும் அந்த நபர் சொன்னதையே சொன்னதாகவும் இதனை அடுத்து தமன்னா கடுப்பாகி ’முடிந்தால் கரண்டை கட் பண்ணி கொள்ளுங்கள்’ என்று போனை வைத்து விட்டதாகவும் தெரிவித்தார். 

அதன் பிறகு தான் அந்த நபர் அனுப்பியது ஒரு போலி லிங்க் என்றும் அதை கிளிக் செய்து பணம் கட்டி இருந்தால் தன்னுடைய மொபைலில் உள்ள டேட்டா எல்லாம் பறிபோய் இருக்கும் என்றும் இது போன்ற போலியாக வரும் டெலிபோன் கால்களையும், லிங்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தமன்னா பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement