• Dec 26 2024

டீப் ஃபேக் வலையில் சிக்கிய தமிழ் நடிகை! அதிர்ச்சியில் திரையுலகினர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் சமீப காலமாக டீப் ஃபேக் செய்யப்பட்ட நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. 

அதிலும் குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கீர்த்து சுரேஷின் டீப் ஃபேக் செய்யப்பட்ட ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோ வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து ஆலியா பட்டும் இதில் சிக்கிக் கொண்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில்,  டீப் ஃபேக் செய்து வீடியோ வெளியிட்டால் அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.


எனினும், இதனால் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆலியா பாட், கத்ரீனா கைஃப், கஜோல் உள்ளிட்ட பாதிக்கப்பட்டதோடு, இவர்களின் வரிசையில், நடிகை கீர்த்தி சுரேசும் சிக்கியுள்ளமை அதிர்ச்சியளித்துள்ளது. 

Advertisement

Advertisement