• Oct 27 2024

தங்கலான் வார்... ஜிவி பிரகாஷின் மயக்கும் இசையில் ரிலீஸானது செகண்ட் சிங்கிள் பாடல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் தேதி  திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தங்கலான் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் பாடலான மினுக்கி மினுக்கி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில்,  தற்போது தங்கலான் படத்தில் இருந்து இரண்டாவது பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றது.

இந்த படத்தில் தன்னுடைய மயக்கும்  இசையால் மேஜிக் காட்டி உள்ளார் ஜிவி பிரகாஷ். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார்.


மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் சூனியக்காரியாக நடித்துள்ளதோடு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது வெளியாகி உள்ள தங்கலான் படத்தின் வார் என்ற இரண்டாவது பாடலும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement