• Dec 27 2024

எனக்கும் அந்த காட்சிக்கும் சம்பந்தமில்லை.. கதையே மாறிடுச்சு! விஜய் மில்டன் கதறல்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி, சரத்குமார், மெகா ஆகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம். இந்தத் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதிலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

மழை பிடிக்காத மனிதன் படத்துடன் யோகி பாபு நடித்த போட்  திரைப்படம், நகுல் நடித்த வாஸ்கோடகாமா, நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சு என பல படங்கள் போட்டியாக வெளியானது.

இந்த நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் மில்டன் இந்த படத்திற்கும் அதில் வரும் முதலாவது ஒரு நிமிட காட்சிக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என அதிரடி பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், இந்த படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிட காட்சி தனக்கே தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகன் யார்? அவர் ரவுடியா? போலீசா? அவருடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது போன்ற பல  ட்விஸ்ட்களை வைத்து தான் படத்தை பண்ணியிருந்தேன்.


ஆனால் ஆரம்பத்தில் வரும் அந்த ஒரு நிமிட காட்சிகளிலேயே அவன் யார் என்பதை ரீவில் செய்து விட்டால் அதன் பிறகு இந்த படத்தை எப்படி பார்க்க முடியும்? இது யார் செய்த சதி என தெரியவில்லை.

அந்த ஒரு நிமிட காட்சியை மட்டும் மறந்து விட்டு படத்தை பாருங்கள். உங்களுக்கு நிச்சயமாக மழை பிடிக்காத மனிதன் படம் பிடிக்கும் என ரசிகர்களுக்கு விஜய் மில்டன் கோரிக்கை  வைத்துள்ளார். 

விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் இருப்பது போல் இருப்பது இயக்குனருக்கே தெரியாது எனக் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது.  யார் இந்த படத்தின் கதையை மாற்றி எடிட் செய்து இருப்பார்? சென்சார் ஆன பிறகு காட்சிகளை கூடுதலாக அமைத்து அப்படியே இட முடியுமா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

Advertisement

Advertisement