• Dec 26 2024

என்னடா சொல்லுறீங்க.. இது புதுசா இருக்கே..!! அட்லீக்கு வந்த பேராசை! ஆனாலும் ஒர்க் கவுட் ஆகுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இவர் பிரபல இயக்குனர் சங்கருக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

தற்போது ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வருகிறார் அட்லீ. இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

ஜவான் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலித்து இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் கூறியிருந்தன.

இதை தொடர்ந்து அட்லீ படத்தில் நடிக்க வேண்டும் என பல பாலிவுட் நடிகர்களும் லைன் கட்டி வருகின்றார்கள். இவ்வாறு கடும் பிஸியான இயக்குனராக மாறிவிட்டார் அட்லி.


இந்த நிலையில், தற்போது அட்லீ  இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் இளைய தளபதி விஜய் ஆகியோரை வைத்து கூட்டணி அமைக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது விஜய் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் கோட். அதன் பின்பு விஜயின் 69 ஆவது படத்திற்கும் இயக்குனர் லாக் ஆகிவிட்டார்.

இவ்வாறான நிலையில் விஜயின் 70 வது படத்தை தற்போது அட்லி இயக்க உள்ளார் என்றும், அதில் ஷாருக்கானுக்கு கூட்டு சேர  உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன. எனினும் அதிகார்வ பூர்வமான தகவலுக்கு பொருத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement