• Dec 27 2024

அந்த விஷயம் கன்ஃபார்ம் தான்.. இதுக்கு மேல ட்விஸ்ட் இல்லப்பா! வைரல் நியூஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகின்றார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, விஜயுடன் இணைந்து நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றார்கள்.


இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, கேரளா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளதோடு ரஷ்யாவிலும் நடைபெற்றது. மேலும் கோட் படத்தின் டப்பிங் பணிகள் 60% முடிவடைந்து உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி  இருந்தது.


இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியும் ஆன விஜயகாந்த் அவர்களின் உருவத்தை எஐ டெக்னாலஜி மூலம் வடிவமைத்து கேமியா ரோலில் நடிக்க வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஆகவே வெங்கட்பிரபு என்ன சம்பவம் செய்து இருக்கார் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement