சோசியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும் தல அஜித் நேற்று கார் ரேசிங்கில் விபத்துக்குள்ளான செய்திகள், வீடியோக்கள் தான் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஒருபக்கம் பதறிக்கொண்டிருக்க விபத்தான காரில் இருந்து அசால்ட்டாக வெளியே வந்தார் அஜித். இது குறித்து பலரும் பலவாறு பேசிவரும் நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இது குறித்து பேசியுள்ளார்.
நடிகர் அஜித் படங்களில் நடிப்பதுடன் கார் பந்தயம் ஓட்டுவதிலும் ஈடுபட்டு வருகிறார். இவரின் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நேற்று கார் பந்தயத்திற்கான பயிற்சிகளில் கலந்து கொண்டு இவரின் கார் சுவருடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தல ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இருப்பினும் இவ் விபத்தில் அஜித்திற்கு எதுவித காயமும் ஏற்படவில்லை என குறித்த மைதானத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் இவ்வாறு கூறியுள்ளார். " நேற்று தொடக்கம் இன்று வரைக்கும் சோசியல் மீடியாவே பற்றிக்கொண்டு எரிகிறது. அஜித் கார் ரேஸில் பயிற்சி செய்யும் போது கார் விபத்தில் சிக்கி விட்டார். ஆனால் அதிஷ்டவசமாக எதுவும் ஆகவில்லை. சுழன்று அடித்த அந்த காரில் இருந்து பூ மாதிரி எழும்பி வந்தாரு. எல்லாருக்குமே பயம் இருக்கும் அந்த வீடியோவை பார்த்த எங்களுக்கே அல்லுவிட்டுருச்சி அவருகிட்ட இருக்குற தைரியம் தான் அவருக்கு ஒன்னும் ஆகவிடாமல் காப்பாற்றி இருக்கு" என்று கூறினார்.
மேலும் "தற்போது சினிமாவில் தளபதி விஜய் இல்லை அவரும் அரசியலுக்கு போய்ட்டாரு, மற்ற நடிகர்கள் படங்கள் பண்ணி தங்களது இடங்களை தக்கவச்சிட்டு இருகாங்க, சிவகார்த்திகேயன் இப்ப தான் முன்னேறி வராரு அவருக்கும் அரசியல் ஆசை எதுவும் வந்துவிட கூடாதுங்கிறது நிறைய பேரோட எதிர்பார்ப்பு. இப்படி இருக்க அஜித்தின் சேவை சினிமாவிற்கு தேவை, அவரின் நீண்ட நாள் லட்சியம் கார் ரேஸிங் அதுல வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் எதிலும் கவனமாக செய்யட்டால் அவரின் நீண்ட கால சினிமாவிற்கும் நல்லதாக இருக்கும்" என்று கூறியுள்ளார் வலைப்பேச்சு அந்தணன்.
Listen News!