• Dec 26 2024

ஆதலால் காதல் செய்வீர் திரைப்பட நடிகையை டார்ச்சர் செய்தே சினிமாவை விட்டு ஓட வைத்த இயக்குநர்- ஆதாரத்துடன் சொன்ன பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கூடல் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் சீனு ராமசாமி. இதைத் தொடர்ந்து  விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றார்.

தொடர்ந்து இவர் இயக்கிய நீர்பறவை, தர்மதுரை, மாமனிதன், போன்ற படங்கள் சிறந்த கதைக்களமாக மட்டும் இல்லாமல், ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின.இந்த நிலையில் இயக்குநர் சீனுசாமி குறித்து  பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


அதாவது, தமிழில் 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இவர் திரை உலகில் இருந்து, சில காலம் ஒதுங்கி இருந்ததன் காரணம், சீனு ராமசாமி செய்த டார்ச்சர் தான் என பத்திரியாகையாளர் பிஸ்மி அதிரடியாக கூறியுள்ளார்.


சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி பல வருடங்களாக வெளியாகாமல் உள்ள திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்' இந்த படத்தில் மனிஷா யாதவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது மனுஷா யாதவுக்கு, சீனு ராமசாமி தொடர்ந்து கொடுத்த டார்ச்சர் சொல்லி மாளாது என்று பிஸ்மி கூறியுள்ளார். மேலும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement