• Dec 25 2024

மனோஜ் வேலை இல்லாமல் இருப்பதைக் கையும் களவுமாகப் பிடித்த ரோகினி- மீனாவுக்கு சர்ப்போட் பண்ணிய விஜயா-Siragadikka Aasai Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று பார்ப்போம்.

முத்துவும் மீனாவும் கோயிலுக்கு போய்ட்டு வரும் போது முத்து மீனாவைத் திட்டிக் கொண்டே வருகின்றார். வேண்டுதல் என்ற பெயரில் தன்னை வைத்து கஷ்டப்படுத்திய விஷயத்தை சொல்லிக் கொண்டே வருகின்றார். மறுபுறம் ஸ்ருதியும் ரவியும் ஒரு ஹொட்டலில் சாப்பிடுவதற்காக போகின்றனர்.


அங்கே இருவரும் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது முத்துவும் மீனாவுடன் அங்கு வருகின்றார். ரவியைக் கண்டதும் முத்து கோபப்பட்டு திட்டுகின்றார். இதனால் ஸ்ருதியும் பதிலுக்கு முத்துவைத் திட்ட மீனா சமாதானப்படுத்திக் கொண்டு முத்துவை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகின்றார்.

மறுபுறம் வீட்டில் ரவியை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டும் என்பதற்காக தன்னுடைய நண்பியை அழைதது அண்ணமலையிடம் பேச வைக்கின்றார் மீனா. அந்த நேரம் பார்த்து மீனாவும் வீட்டுக்கு வந்து ரவியையும் ஸ்ருதியையும் வீட்டுக்கு அழைக்குமாறு அண்ணாமலையிடம் பேசுகின்றார் மீனா. இதனைப் பார்த்து விஜயாவும் சந்தோசப்படுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

தொடர்ந்து வெளியாகிய ப்ரோமோவில், மனோஜ் பூங்காவில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் ரோகினி மனோஜைக் கண்டு விடுகின்றார். ரோகினியைக் கண்டதும் மனோஜ் என்ன சொல்வதென்று தெரியாமல் எழுந்து நிற்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement