• May 10 2025

சினிமாவிற்கு வருவதற்கு முன் அப்பா கூறிய ஆலோசனை .....! மனம்திறந்த அன்பு மயில்சாமி...!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவில் நகைச்சுவை மாத்திரமின்றி குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் மயில் சாமி .இவர் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மகன் அன்பு மயில் சாமி  பல திரைப்படங்களில்  நடித்து வருகின்றார். அன்பு மயில் சாமியிடம் நேர்காணல் ஒன்றில் பல கேள்விகள்  கேட்கப்பட்டன அதில் அப்பா கொடுத்த ஆலோசனை பற்றி கேட்டதற்கு  அவர் கூறிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது .


நகைச்சுவை  கேரக்டரிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் திரைப்படங்களில் மாத்திரம் இன்றி மேடை நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு மாத்திரம் மின்றி தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களிடம் இல்லையென சொல்லாது  உதவிகள் செய்தவர். தன்னிடம் பணம் இல்லாத போதுகூட நண்பர்களிடம் பெற்று கொடுத்தவர் .


இவருடைய  மகனிடம் அப்பா உங்களுக்கு என்ன ஆலோசனை வழங்குவர் என்ற கேள்விக்கு அன்பு சொன்னபதிலாக "நீ  முதல் சினிமாவிற்கு உண்மையா இருக்கணும் என்றும் ஒரு வேலைய செய்யும் போது விருப்பத்துடன் செய்ய வேண்டும் எனவும் புறம் பேசுவாங்க,முன்னாடி நல்ல மாதிரி கதை விட்டு பிறகு வேற மாதிரி பேசுவாங்க அதை எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது." எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement