• Dec 26 2024

தன்னைத் தானே காரி துப்பிய கோபி... ராதிகா எடுத்த முடிவு! சுக்குநூறாக உடைய போகும் பாக்கியா குடும்பம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராதிகாவிடம் பேசிய கோபி, பிசினஸ் இப்போ நல்லா போகுது கூடிய சீக்கிரம் இன்னொரு பிரான்ஞ் ஆரம்பிக்கலாம், பிறகு நீ ரெஸ்ட் எடு நான் எல்லாம் பாத்துக்கிறேன் என சொல்ல, உங்களுக்காக நான் வேளைக்கு போகாம இருக்க மாட்டேன். எனக்கு வேலை செய்ய பிடிக்கும் என சொல்லுகிறார்.

அதன்பின் கோபி கிச்சனில் பாக்கியா நடந்து கொண்ட விதத்தை சொல்ல, ராதிகா அவங்களுக்கு உண்மை தெரியும் என சொல்லி ஷாக் கொடுக்கிறார்.

அதன்பின் ராதிகா கிச்சனுக்கு போக அங்கு பாக்கியா, செல்வி, ஈஸ்வரி இருக்க, நான் பிறகு சமைக்கிறேன் என பாக்கியாவுக்கு கண்ணை காட்டிவிட்டு செல்கிறார். பிறகு கோபி வந்து நான் அம்மா கிட்ட சொல்ல போகிறேன் எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லு என சொல்லி, வீராப்பாக செல்கிறார்.


ஆனால் அங்கு பாக்கியா இருப்பதை பார்த்து கதைக்காமல் மழுப்புகிறார். மேலும் ஹாலுக்கு வாங்க கதைக்க, இல்ல வோக்கிங் போவம் என கேட்க, கால் நோகுது இங்கையே சொல்லு, என சொல்ல அவர் பேசாமல் வந்து விடுகிறார்.

இதை தொடர்ந்து ரூமுக்கு வந்ததும் ராதிகாவிடம் நடந்தவற்றை சொல்ல, நீங்க விஷயத்தை எப்படியாவது சொல்லுங்க. பிறகு நாங்க எங்க வீட்டுக்கு போவம் என ராதிகா சொல்லுகிறார். ராதிகா போன பிறகு அம்மா கிட்ட எப்படி பேசுவேன் என தன்னை தானே துப்பிக் கொள்கிறார் கோபி. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement