• Dec 26 2024

வயசுக்கு மீறி ஓவரா பேசுறா.. சாச்சனா மீது ஒரே போடு போட்ட பாய்ஸ் டீம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பாய்ஸ் கேர்ள்ஸ் என்ற முறையில் பிக் பாஸ் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு டாஸ்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 8 ஒரு வாரத்தை கடந்த போதிலும் இன்னும் ஆட்டம் சூடு பிடிக்கவில்லை என்று தோன்றுகின்றது. இதனை பற்றி விஜய் சேதுபதியும் விமர்சித்துள்ளார். அனைவருமே டூர் வந்தது போல காணப்படுகின்றார்கள். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிப்படி முதலாவது போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டார். அதன்படி தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. அதில் பெண் போட்டியாளர்கள்  அதிகமான ஜெஃப்ரியையும் ரஞ்சித்தையும் நாமினேட்  செய்துள்ளார்கள்


அதேபோல ஆண்கள் அதிகமாக சௌந்தர்யாவையும் சாச்சனாவையும் நாமினேட் செய்துள்ளார்கள். மேலும் சில விஷயங்கள்  வயசுக்கு மீறி பேசுவதாக சாச்சனாவை விஜே விஷால் மற்றும் சக்யா ஆகியோர் நாமினெட் செய்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேடாகி வெளியே சென்ற ரவீந்தர் தனது வீடியோவை நேற்றைய தினம் வெளியிட்டு இருந்தார். அதில் தனக்கு இத்தனை நாட்களாக ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என்று கூறி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement