• Dec 26 2024

பழம்பெரும் நடிகரான அடடே மனோகரை இழந்தது சினிமாத்துறை! பலரும் கண்ணீர் அஞ்சலி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நாடக, டிவி நடிகரான அடடே மனோகர் ஏராளமான டிவி, ரேடியோ நாடகங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து அநேகமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருந்தார்.

சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளதோடு எஸ்பி சேகர், கிரேசி மோகன் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

பெரும்பாலும் நகைச்சுவை கேரக்டரில் அதிகமாக நடித்துள்ளார். சினிமாவிலும் இதையே பின்பற்றினார்.

சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, ரமணி வேர்ட்ஸ், ரமணி உள்ளிட்ட பல டிவி சேனல்களில் இவர் நடித்து புகழ்பெற்றார்.


சின்னத்திரை நாடகங்களில் நடிகராக மட்டுமில்லாமல் கதை ஆசிரியராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை குமரன் சாவடியில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அவர் காலமாகியுள்ளார்.

கடந்த சில தினங்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு காலமானார்.

தற்போது அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் இறுதிச் சடங்குகள் திட்டமிட்டபடி நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, அடடே மனோகரின் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement