ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் அண்ணா. இந்த சீரியலை துர்கா சரவணன் இயக்கி வருகின்றார். இதில் நாயகனாக மிர்ட்சி செந்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நந்தினி சீரியல் பிரபலம் நித்யா ராம் நடித்து வருகின்றார்.
மேலும் இந்த சீரியலில் பூவிலங்கு மோகன், ஸ்ரீலேகா ராஜேந்திரன், ப்ரீதா சுரேஷ் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றனர். தாய் இல்லாத தனது தங்கைகளுக்காக தாய்க்கு சமமாக தாயாக இருந்து வளர்த்து வரும் அண்ணனின் கதையை மையமாகக் கொண்டே இந்த சீரியல் நகர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், இந்த சீரியலில் சண்முகத்தின் தங்கையாக வீரா கேரக்டரில் நடிக்கும் சுசித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுசித்ரா.
அவருடைய நீண்ட நாள் காதலரை அறிமுகம் செய்து கூடிய விரைவிலேயே திருமணம் செய்ய உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். தற்போது இவர்களுக்கு பலரும் இணையத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!