Girish A. D. இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படம் ப்ரேமலு இந்த படத்தில் நஸ்லன் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு நடித்திருந்தனர். 3 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் 136.25 கோடி அளவில் வசூலித்து வெற்றியடைந்தது. சிறந்த மலையாள படம் ஆக இருந்தாலும் இதன் தமிழ் டப்பிங் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
இப் படத்தின் இரண்டாவது பாகத்தினை தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் படத்தினை எடுப்பதற்கு தீர்மானித்திருந்தனர். இருப்பினும் மமிதா பைஜு விஜய் நடிக்கும் ஜனநாயகன் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்தமையினால் படக்குழு சூட்டிங்கை ஒத்திவைத்தது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு விஜய் பட வேலைகள் மே மாதத்தில் முடிவடைந்த பின்னர் ஜூன் மாதம் அளவில் இப் படத்தில் நடித்து கொடுப்பதற்கு தேதி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. மற்றும் மமிதா பைஜு விஜய் படத்தில் அவருக்கு மகளாக நடித்து வருவதாக குறிப்பிடப்படுள்ளது.
Listen News!