• Dec 24 2024

ரிலீசுக்கு முன்பே வெளிவந்த முதல் விமர்சனம்! வைரலாகும் மதன் கார்க்கி டுவிட்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்துள்ள கங்குவா நவம்பர் 14 திரைக்கு வருகிறது. பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி இருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பே படத்தின் பிரமோஷன் தொடங்கிவிட்டது. 


அதன்படி மதன் கார்க்கி தன்னுடைய சோசியல் மீடியா தளத்தில் கங்குவா படம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் வசனகர்த்தாவான இவர் தற்போது முழு படத்தையும் பார்த்துள்ளார். ஏற்கனவே டப்பிங் போது காட்சிகளை பார்த்தேன். ஆனால் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இதன் தாக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. கதையின் ஆழமும் பிரம்மாண்டமும் இசையின் கம்பீரமும் வியக்க வைக்கிறது.


அதற்கு உயிர் கொடுப்பது போல் சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. அதே போல் சிறுத்தை சிவாவின் கனவுக்கு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உயிர் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார். இப்படி ரிலீசுக்கு முன்பே அவர் கொடுத்துள்ள விமர்சனம் படத்திற்கு பிரமோஷன் ஆக மாறி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.  


Advertisement

Advertisement