• Dec 24 2024

என் வாழ்க்கையை இழந்து விட்டேன்! வருத்தத்துடன் நடிகை சமந்தா பதிவு…!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என கலக்கியவர்இவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார், அங்கேயும் பெரிய அளவில் அவர் வலம் வர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.


சிறிது காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சமந்தா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவான் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் விரைவில் வெளியாக இருக்கிறது.


இந்த வெப் தொடரின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், இந்த சீரிஸில் நீங்கள் ஸ்பை ஏஜெண்டாக நடித்தீர்களே, நிஜ வாழ்க்கையில் கூட ஸ்பையாக செயல்பட்டீர்களா? என்ற கேள்விக்கு நிஜ வாழ்க்கையில் கூட நான் அப்படி செய்ய வேண்டியிருந்தது. அப்படி செய்யாமல் இருந்தது மிகவும் தவறு, ஸ்பை ஆகாததால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என்று கூறியுள்ளார்.


இந்த விடயம் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. அவர் நாகா சைத்தன்யாவை பற்றி தான் சொல்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement