• Dec 26 2024

உண்மை காதலின் உன்னதம் - கணவர் விஜயகாந்தை அழகுபடுத்தும் பிரேமலதா- ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்- மனதை உருக்கும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்க தலைவராக இருந்தும் ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்திருக்கிறார். சினிமாவில் பீக்கில் இருந்தபோதே அவர் அரசியலிலும் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். 

 திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முழு ஓய்வில் இருந்தார். சில நாட்களுக்கு முன்னதாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் கவலையடைந்தனர். அதனையடுத்து வீடு திரும்பிய அவர் மீண்டும் மருத்துவமனையில் நேற்று அட்மிட் ஆனார். 

இந்த முறையும் விஜயகாந்த் வீடு திரும்பிடுவார் என்று ரசிகர்களும், தொண்டர்களும் காத்திருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நாளை நடக்கவிருக்கிறது.


இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு பல பிரபலங்கள் நேரில் சென்று கண்ணீர் வடித்து மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

அதில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவருக்கு முடிவெட்டி கால் நகங்கள் எல்லாம் வெட்டி தனது கணவரை அழகுபடுத்துகின்றார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் இது தான் காதல் என்று கூறுவதோடு பிரேமலதாவுக்கு தமது ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement