• Dec 27 2024

வெயிட்டிங்ல இருந்த ரசிகர்களை கடுப்பாகிய கல்கி படக்குழு! பைரவா ஆந்தம் சோலி முடிஞ்சா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சுமார் 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் தான் கல்கி 28 98 ஏடி. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார்.  இவர் இசையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ நேற்று வெளியாகி இருந்தது.

இந்த படம் மகாபாரத போருக்கு பின்னால் தொடங்கும் கலியுகத்தில் கல்கி அவதாரத்தில் விஷ்ணு பகவான் அவதரித்து மக்களை காப்பாற்றுவார் என்ற புராணக் கதையுடன் புனைவு கதையாக இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அஸ்வத்தாமா கேரக்டரில் அமிதாப்பச்சனும் பைரவா கேரக்டரில் பிரபாஸும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பைரவா ஆந்தம் பாடலின் வீடியோ இன்றைய தினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது குறித்த பாடல் நாளை காலை 11 மணிக்கு முழு வீடியோவாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இந்தப் பாடல் இன்று  மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு எட்டு மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்த பாடலை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். பாடலுக்கே இப்படி என்றால் கல்கி படத்தையும் இன்று, நாளை அல்லது ஒரு மாதம் கழித்து தான் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement