• Dec 26 2024

சன் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகர்! யாரும் எதிர்ப்பாராத காரணம்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இந்திய தொலைக்காட்சிகளில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று ஒன்றுதான் சன் டிவி.

இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்,  ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள்  என்பவற்றுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அதிலும் முக்கியமாக  சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அனேகமான இல்லத்தரசிகள் அடிமையாகவே காணப்படுகின்றனர்.


அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பாக முக்கிய சீரியல்களின் வரிசையில் சிங்கப்பெண்ணே, கயல், எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இவற்றின் வரிசையில் காணப்படும் பிரபலமான சீரியல் தான் மலர் என்ற சீரியல். இந்தத் தொடர் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.


இதில் ப்ரீத்தி ஷர்மா மற்றும் அக்னி ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வரும் நிலையில், தற்போது இந்த  தொடர் 250 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது வெளியான தகவல்களின்படி மலர் என்ற சீரியலில் இருந்து நடிகர் அக்னி திடீரென வெளியேறி உள்ளாராம்.


அவருக்கு எதிர்ப்பாராத விதமாக காயம் ஏற்பட்டுவிட்டதாம், குணமடைய நீண்ட மாதம் ஆகும் என்பதாலும் சீரியல் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒளிபரப்பாக வேண்டும் என்பதாலும் தொடரில் இருந்து விலகி உள்ளாராம்.

மேலும், புதிய அர்ஜுனாக வருபவருக்கு நல்ல ஆதரவு கொடுத்து ஹிட் சீரியலாக்க வேண்டும் என பதிவு போட்டுள்ளார். 

Advertisement

Advertisement