தமிழ் சினிமாவில் வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இந்த படத்தில் காதலுக்காக வில்லத்தனமாக நடித்து இருந்தாலும் அதில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது சினிமாத் துறையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.
தமன்னாவின் நிறம் மற்றும் நடிப்பு, திறமை என்பன அவருக்கு பல மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிவதற்கு காரணம் ஆனது. தமிழில் முன்னணி நடிகர்களாக காணப்படும் அஜித், விஜய், ரஜினி, தனுஷ் என பலருடன் ஜோடியாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார்.
d_i_a
தமன்னாவின் நடிப்பில் இறுதியாக அரண்மனை 4 படம் வெளியானது. இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார் தமன்னா. இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருந்தது. மேலும் அதில் தமன்னா கிளாமராக ஆடிய பாடலை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தியேட்டரில் அலை மோதினர்.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதாகவும், இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்லும் வீடியோக்கள், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது நடிகை தமன்னா தனது காதலருடன் சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் விஜய் வர்மாவுடன் கைகளைப் பிடித்துக் கொண்டு வரும்போது அவரை சுற்றி வளைத்த மீடியாக்கள் கேள்வி எழுப்பவே, விறுவிறு என சென்றுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது.
Listen News!