• Jan 18 2025

Thug Life படத்தின் தாமதத்திற்கு மணி சார் காரணமா? வெட்ட வெளிச்சமான சம்பவம்

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் மணிரத்னம் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக்லைப். இந்த படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், திரிஷா, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தை கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்தினம் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளார்கள். இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

d_i_a

இந்த நிலையில், தக்லைப் படத்திற்கு மணிரத்தினம் கூடிய நாட்களை எடுத்துள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். அதாவது ராவணன் படத்திற்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகும் தக்கலைப் படத்திற்கே அதிக நாட்களை மணிரத்தினம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.


மேலும் இந்த படத்திற்கு ஏ,ஆர் ரகுமான் இசையமைத்து வரும் நிலையில், அதற்கான பணிகளை ஏப்ரல் மாதத்தில் முடித்துக் கொடுப்பதாகவும் ஏ.ஆர் ரகுமான் வாக்களித்துள்ளார். இதனால் இந்த படம் ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் தக்கலைப் படத்தை நெட்பிளிளிக் நிறுவனம் கைப்பற்றி  உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement