• Dec 26 2024

நன்றி மறந்த நடிகை திரிஷா... தூக்கி விட்டவரை இப்படியா காலை வாருவது... திரிஷா செயலால் டென்ஷனான நெட்டிசன்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷாவை கை கொடுத்து தூக்கி விட்ட முதல் இயக்குனர் அமீர். அதாவது அமீர் இயக்குனராக அறிமுகமான முதல் படம் மௌனம் பேசியதே. இப்படத்தில் ஹீரோவாக சூர்யா நடித்தார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார்.


அந்த நேரத்தில் மௌனம் பேசியதே படம் எடுக்கும் போது சூர்யாவுக்கு ஜோடியாக முன்னணி ஹீரோயின்கள் யாரையாவது போடலாம் என்று அமீரிடம் பலரும் கருத்துக்களை தெரிவித்தார்கள். ஆனால் அதையெல்லாம் செவி கொடுத்து கேட்காத அமீர், த்ரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஹீரோயின் வாய்ப்பை கேட்டு அலைந்து திரிந்து கொண்டிருந்த திரிஷாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் அமீர்.


அப்படி த்ரிஷா மீது நம்பிக்கை வைத்து முதல் வாய்ப்பை கொடுத்த இயக்குனர் அமீர் தான் . அப்படி அமீர் செய்த நன்றியை மறந்து தற்போது த்ரிஷா பச்சோந்தியாக மாறி இருக்கிறார். அதாவது மௌனம் பேசியதே படம் வெளிவந்து கிட்டத்தட்ட 21 வருஷங்கள் ஆன நிலையில் சூர்யா அவருடைய பங்குக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவு போட்டிருந்தார்.


அதேபோல் த்ரிஷாவும் எல்லோருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்த த்ரிஷா அமீருக்கு மட்டும் சொல்லவில்லை. அதற்கு காரணம் ஒருவேளை அமீர்க்கு நன்றி சொல்லி இருந்தால் எங்கே சூர்யாவிற்கு மனக்கசப்பாக மாறிவிடுமோ என்ற ஒரு தயக்கம் தான். ஏனென்றால் சூர்யாவின் அடுத்த படத்தில் திரிஷாவால் நடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற ஒரு பயம்.


த்ரிஷாவுக்கு முதல் சான்ஸ் கொடுத்து கை தூக்கி விட்டவரே அமீர்தான். அப்படிப்பட்ட அவரை மறந்து திரிஷாவின் சுயநலத்திற்காக தற்போது இருப்பது ரொம்பவே தப்பு இணையவாசிகள் அனைவரும் பேசும்படியாக ஒரு கேவலமான விஷயம் ஆகிவிட்டது. எல்லாத்துக்கும் நியாயம் தர்மம் என்று வரக்கூடிய திரிஷா இதில் மட்டும் ஏன் மனசாட்சியை இல்லாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் பலர் தங்களது கருத்தை முன்வைக்கின்றனர். 

Advertisement

Advertisement