விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீரியல்களிலும் பார்க்க TRPல் தெறிக்கவிட்டு கொண்டு இருக்கிறது. அத்தோடு ரோகிணி மாட்டிவிடுவாரா என்ற எதிர்பார்ப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சீரியலில் தற்போது மனோஜிடம் ருந்து ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய நபரை அனைவரும் தேடி கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் அந்த விடயத்தில் ரோகிணி மாட்டிவிடுவாரா என்று எதிர்பார்த்திருக்க அடுத்து ஒரு டுவிஸ் நடைபெறுகிறது.
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த வயதான தம்பதி முத்துவின் காரில் பயணம் செய்ய, அவர்களிடம் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார் முத்து. அவர்கள் இருவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விருந்தும் வைக்கிறார்.
அப்போது அண்ணாமலை "வெளிநாடுனு பையன் சொன்னான் எந்த ஊரு நீங்க?" என்று கேட்கிறார். அவர்கள் மலேஷியா என்று சொன்னதும் விஜயா "என் மருமகளும் மலேஷியாதான்" என்று சொல்லி ரோகிணியை கூப்பிடுகிறார். இதனால் வசமாக சிக்கிக்கொள்கிறார் ரோகிணி. இதனால் ரோகிணி ரூமில் இருந்து புலம்பி கொண்டு இருக்கிறார். இதிலிருந்து தப்பிப்பாரா அல்லது, மாட்டிக்கொள்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!