• Dec 28 2024

தனுஷின் தாய் கொடுத்த மனு மூத்த நடிகருக்கும் அழைப்பாணை !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சென்னை தி நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள கோல்டன் அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாய் தந்தையாரான விஜயலட்சுமி,கஸ்தூரி ராஜா மற்றும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சரத்குமார் ஆகியோர் வசிப்பது நாமறிந்ததே.கடந்த வாரமளவில் தனுஷின் தாய் விஜயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றில் சரத்குமாருக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்திருந்தார்.


குறித்த  அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளி மேல்தளத்தை குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவதை தடுப்பதாகவும், தரைத்தளத்தில் உள்ள நடிகர் சரத்குமார் சட்டவிரோதமாக பொது பகுதியை  வணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.


இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு  புகார் அளித்தும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுடிருந்தனர்.குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை மாநகராட்சி மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement