• Dec 29 2024

இலங்கையில் நடந்த ‘கோட்’ படப்பிடிப்பில் மோகன்.. ஈழத்தமிழராக நடிக்கின்றாரா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு சில காட்சிகள் சமீபத்தில் இலங்கையில் படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அங்கு மோகன் சம்பந்தமான காட்சிகள் தான் படமாக்கப்பட்டது என்று தற்போது செய்தி வெளியாகி இருக்கும் நிலையில் அவர் ஈழத்தமிழராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் சமீபத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் இலங்கையில் படமாக்கப்பட்டதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்றாலும் வேறு சில நட்சத்திரங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகர் மோகன் இலங்கையில் தனது காட்சியின் படப்பிடிப்பு நடந்ததாக கூறியுள்ளார். தனது கேரக்டர் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் இலங்கை சம்பந்தப்பட்ட கேரக்டரில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ள நிலையில் ஒருவேளை ஈழத் தமிழராக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேலும் தனக்கு இயக்குனர் வெங்கட் பிரபுவை பல வருடங்களுக்கு முன்பே தெரியும் என்றும் சில படங்களில் நடிக்க அவர் தன்னை அணுகியதாகவும் ஆனால் அந்த படங்களில் நடிக்க என்னால் முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தளபதி விஜய் உடன் நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் மிகவும் எளிமையானவர் என்றும் அவரது கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement