• Dec 26 2024

கைதி 2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. லோகேஷ் கனகராஜின் புது பிளான்? தயாராகும் ரோலக்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படுபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் படங்கள் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படும். முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி, கமல் என தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி படத்தை இயக்கி வருகின்றார்.

லோகேஷ் கனகராஜ் தற்பொழுது சூப்பர் ஸ்டாரை வைத்து கூலி படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்த படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் நிலையில், ரஜினி காந்துக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஷூட்டிங்கை நடத்துவது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்குவதற்கு திட்டம் போட்டு  இருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சக்கைப் போடு போட்டு இருந்தது.


இந்த நிலையில், கைதி 2 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 50 நாட்களில் நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் களம் இறங்கி இருந்தார் நடிகர் சூர்யா. அந்த படத்தில் கார்த்தியும் இடம் பெற்று இருந்தார். கைதி 2 படத்திலும் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா அதிரடி காட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கைதி 2 படத்தின் இரண்டாவது பாகத்தில் எத்தகைய கதைக்களத்தை லோகேஷ் கையில் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Advertisement

Advertisement