பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களை எட்ட உள்ளது. இந்த சீசனில் மொத்தமாக 20 பேர் பங்கேற்றனர். தற்போது அதிலிருந்து ஒன்பது பேர் வெளியேறி உள்ளனர். இறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி எலிமினேட் ஆகி வெளியே சென்றார்.
நேற்றைய தினம் பிக் பாஸ் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக தெரிவித்திருந்தனர். இது ஹவுஸ்மேட்ஸுக்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும் வகையில் காணப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற உள்ளது.

அதில் பிரஜின் பிரின்சிபல் ஆகவும், தமிழ் ஆசிரியராக கனியும்,எப்ஜே மற்றும் பார்வதி இருவரும் வார்டன் ஆகவும் ஏனைய ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஸ்டூடண்ட்ஸ் ஆகவும் நடிக்க உள்ளனர்.
எனவே தற்போது வெளியான இந்த ப்ரோமோ பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இதில் என்ன பூகம்பம் வெடிக்க போகுது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!