• Apr 17 2026

அவங்க இருந்திருந்தா… இந்த Industry-யை நடுங்க வச்சிருப்பாங்க! - சில்க் ஸ்மிதா

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 80களிலும் 90களிலும் பெரும் செல்வாக்கும், தனித்துவமான இடமும் பெற்ற நடிகை சில்க் ஸ்மிதா இன்று வரை மறக்க முடியாத கலைஞராகவே உள்ளார். கவர்ச்சியான நடிப்பால் மட்டும் அல்ல, தனித்துவமான ஸ்கிரீன் பிரசென்ஸ் காரணமாக சில்க் ஸ்மிதா தென்னிந்திய சினிமாவில் லெஜண்டாக திகழ்ந்தார்.


இன்று கூட அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில், நடிகர் ஆனந்த் ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் சில்க் ஸ்மிதா பற்றிய சில அரிய தகவல்களை பகிர்ந்து, பலரையும் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியுள்ளார்.


பேட்டியில் சில்க் ஸ்மிதா குறித்து பேசும் போது, ஆனந்த் ராஜ் கூறியவை மிகுந்த கவனத்தை ஈர்த்தன. அதாவது, " நடிகை சில்க் ஸ்மிதா எனக்கு நல்ல தோழி. அவங்க என் கூட நிறைய படம் நடிச்சிருக்காங்க. அவங்க இறக்கிறதுக்கு ஒரு நாள் முன்னாடி எனக்கும் அவங்களுக்கும் ஒரு ஐட்டம் song ஷூட் இருந்திச்சு. அடுத்த நாள் அவங்க இறந்திட்டாங்க என்று சொன்னதும் ஷாக் ஆகிட்டேன். 

அவங்களோட அந்த முடிவுக்கு காரணமே மனஅழுத்தம் தான். அவங்களுக்கு அவ்ளோ வலி இருந்திச்சு. அவங்க இருந்திருந்தால் இன்னைக்கு வரை நடிச்சிருப்பாங்க. சில்க் ஸ்மிதா சரித்திரைத்தை இன்னொரு நடிகை ஈடு செய்ய முடியாது." என்று கூறியிருந்தார். 

சில்க் ஸ்மிதா எப்படி பல திரைப்படங்களில் பிரகாசித்தாரோ, அதைப் போலவே அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்களையும், விமர்சனங்களையும், சமூக அழுத்தங்களையும் எதிர்கொண்டார். இதே உண்மையை நடிகர் ஆனந்த் ராஜ் தனது பேட்டியில் தெளிவாக வெளிப்படுத்தினார்.

Advertisement

Advertisement