• Dec 25 2024

மாயா சொன்ன ரகசிய CODE WORD..? அதிரடியாக எச்சரித்த பிக்பாஸ்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் இன்றைய தினம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா தான் சமூக வலைத்தளங்களில் பேசுப் பொருளாக காணப்படுகின்றார்.

இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சங்களுடன் வெளியேறிய பூர்ணிமாவுக்கு அவர்களது வீட்டார், நண்பர்கள் என அனைவரும் பலத்த வரவேற்பை கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தனது வீட்டிற்கு சென்ற பூர்ணிமா, தற்போது குதூகலமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

பிக் பாஸில் டைட்டில் வின்னருக்கு அடுத்ததாக பேசப்பட வேண்டிய ஒரு நபராக ரன்னர் காணப்படுகிறார். அதன்படி பிக் பாஸ் சீசன் 7 இல் ரன்னராக பூர்ணிமா கெத்து காட்டுகிறார்.


அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் மாயாவை டைட்டில் வின்னர் ஆக்குவதற்குரிய வேலைபாடுகளும் நடந்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்ற வகையிலே சில கோட் வேர்ட் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா, ''வீட்டுல ஃபேன் இல்ல.. ஏசி போட சொல்லு... நான் வெளிய வந்து விண்டோ அடைச்சுக்குறேன்... '' என சொல்கிறார்.

அதற்கு அர்த்தம் என்னவென்று பார்த்தால், வீட்டில் ஃபேன் இல்லை என்றால், வீட்டுல எனக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை என்று அர்த்தம். அடுத்து ஏசி போடச் சொல்லு என்றால், பி ஆர் மூலம் ஓட்டு போட்டு ஜெயிக்க வைங்க என்று அர்த்தம். அடுத்ததாக விண்டோவ நான் வந்து அடைச்சிடுவன் என்றால் நான் வந்து காசு எல்லாம் அடைச்சிடுவன் என்று அர்த்தம்.


இவ்வாறு , பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டே கோட் வேர்ட் மூலம் சிக்னல் கொடுக்கிறார் மாயா.

பிக்பாஸ் வீட்டிலிருந்து பூர்ணிமா வெளியேறும் போது விசித்திரா அழுது புலம்பி அவரை அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை எடுப்பதற்கு போட்டியாளர்கள் தயங்கிய நிலையில், பிக் பாஸ் எச்சரித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement