• Dec 26 2024

மறைந்த நடிகர் விஜயகாந்த் சமாதியில் புகழ் எடுத்த சபதம்! பெருமிதம் கொள்ளும் தருணம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்தது இன்னும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பிரிவை எண்ணி விஜயகாந்தின் குடும்பம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் நாடுமே கேப்டன் இல்லாமல் தவிக்கின்றது.

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் பலர் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் சென்னை திரும்பிய நடிகர்கள் அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


அதுபோலவே இன்றைய தினம் நடிகர் சூர்யா, விஜயகாந்தின் சமாதிக்கு சென்று தேம்பி தேம்பி அழுது, அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில், காமெடி நடிகர் புகழ் இரண்டாவது முறையாக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.


இவ்வாறு கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய புகழ், மறைந்த விஜயகாந்த் போல நானும் என்னுடன் கே கே நகர் ஆபிசில் தினமும் மதியம் பசி என வருபவர்களுக்கு உணவளிக்க போகிறேன். அதை இன்று தொடங்குவதால் அதற்காக கேப்டனிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன் என புகழ் கூறி இருக்கிறார்.  

தற்போது அவரது முடிவை பொருட்டு அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement