• Dec 27 2024

டைட்டில் வின்னர் ஆன போதையில் பிக்பாஸ் பிரபலம் போட்ட கூத்து- ஸ்கெட்ஸ் போட்டு பிடித்த போலீஸார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பல மொழிகளில் பல சேனல்களில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சிககென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. தமிழில் நடைபெறும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அடுத்த ஆணடின் தை மாதம் முடியவுள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

தெலுங்கில் இந்த நிகழ்ச்சியின் ஏழாம் சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.அதில் பல்லவி பிரஷாந்த் என்பவர் டைட்டில் வின்னர் ஆனார்.அமர்தீப் என்பவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு பல்லவி பிரஷாந்த் ரசிகர்கள் அதிகம் கூடி பேரணியாக சென்று இருக்கின்றனர்.


அப்போது அவர்கள் சில வாகனங்களையும், பேருந்துகளையும் தாக்கி சேதப்படுத்தி இருக்கின்றனர். அந்த வீடியோவும் வெளியாகி சர்ச்சை ஆகி இருந்தது.இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சில ரசிகர்களையும் வீடியோ ஆதாரத்தின் மூலம் கைது செய்தனர். 

ஆனால் பல்லவி பிரஷாந்த் தலைமறைவாக இருக்கிறார் எனவும் தகவல் வந்தது.இந்நிலையில் இன்று போலீஸார் இன்று பல்லவி பிரஷாந்தை கைது செய்திருக்கின்றனர். திடீர் புகழ் போதையில் இப்படி நடந்த சம்பவத்திற்கு காரணமான அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement