• Dec 26 2024

சிறுவயதில் இவ்வளவு கியூட்டாக இருக்கும் நடிகை யார் தெரியுமா?- கமலுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையா இது?

stella / 1 year ago

Advertisement

Listen News!

காதல் ரோஜாவே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர்தான் நடிகை பூஜா குமார்.குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'இளவேனில் இது வைகாசி மாதம்' பாடல் பலரது ஃபேவரட் பாடல்களில் ஒன்று.

தொடர்ந்து மாடர்லிங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கின்றார்.2003 ஆம் ஆண்டு மேஜிக் மேஜிக் 3டி படத்தில் நடித்தார்.


இதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர், உலக நாயகன் கமல் ஹாசனின்  'விஸ்வரூபம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.அதன் பின்னர் 'உத்தம வில்லன்', 'விஸ்வரூபம் 2' என அடுத்தடுத்து கமலுடன் ஜோடி போட்டார்.

பின்னர் திரையுலகை விட்டு விலகி, தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆனார். தற்போது இவருக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.


இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்ட, சிறிய வயது புகைப்படம் ஒன்றை பூஜா குமார் வெளியிட இந்தப் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement