• Dec 26 2024

தனுஷை மகன் என கூறியவர் வீட்டில் நடந்த சோகம்.. துக்கம் கேட்க செல்வாரா தனுஷ்?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

மதுரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி என்ற தம்பதியினர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் எங்களது மகன் என பரபரப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இது தமிழ் சினிமாவுக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 

அதன்படி, தனது மகன் தற்போதைய நடிகர் தனுஷ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவர் தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக  உள்ளார். இதனால் பெற்றோர் பராமரிப்பிற்காக எங்களுக்கு மாதாந்த உதவித் தொகையை எங்களுடைய மகனான தனுஷ் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதை தொடர்ந்து மேலூர் கோர்ட்டில் தொடர்ந்த இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளை ரத்து செய்தது. ஆனால் இந்த வழக்கில் தனுஷ் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளதாக குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை அலுவலகம் கதிரேசன் மதுரை ஆறாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி ஆனது.


இதை எதிர்த்து  ஐகோர்ட்டு கிளையில் சீராய்வு மனு செய்திருந்தார்  கதிரேசன். அதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் உண்மை தன்மையின் முடிவு நீதிமன்றத்தில் அனுப்பப்படவில்லை இதை கவனிக்காமல் தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்து முறையாக விசாரிக்குமாறு கூறியிருந்தார்.

ஆனாலும், இந்த வழக்கு "உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்ய பட்டுள்ளது "என்று அண்மையில் தான் நீதிபதி உத்தரவு இட்டு இருந்தார்.


இந்த நிலையில், நடிகர் தனுஷ் எனது மகன் என்று கூறி வந்த கதிரேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல் நலம்  பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கதிரேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த செய்தியறிந்து நடிகர் தனுஷ், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் செல்வாரா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது.

Advertisement

Advertisement