• Dec 26 2024

விஜயா போட்ட போடுல பிச்சை எடுக்கும் மனோஜ்! ஸ்ருதியை காப்பாற்றிய முத்து! விறுவிறுப்பான திருப்பத்தில் சிறகடிக்க ஆசை

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், விஜயாவிடம் வீட்டை அடகு வைத்து பணம் தருமாறு கேட்க, விஜயா பேசாமல் இருக்கிறார். அந்த நேரத்தில் முத்து நீ ஏற்கனவே 27 லட்சம் எடுத்துட்டு ஓடிப் போன,  இப்ப 14 லட்சம் கேக்கிறா, ஆக மொத்தம் 41 லட்சம் அப்படி என்று கணக்கு போடுகிறார்.

ஆனால் மனோஜ் நான் எல்லாத்தையும் கனடா போய் உழைத்து தருவேன் வீட்டை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டதோடு, ரோகிணி சொல்லி தான் இந்த மாதிரி ஐடியா வந்தது என்பதையும்  போட்டு உடைக்கிறார். இதனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் கோவப்பட்ட விஜயா பணம் தர முடியாது. எங்க அப்பா எனக்காக தந்தது இந்த வீடு ஒன்றுதான். இனி வீட்டுல கை வைக்க மாட்டேன். உனக்கு பணம் வேணும் என்றா உழைத்து சம்பாதி என கண்டபடி பேசுகிறார். 

இதை பார்த்த அண்ணாமலையும் முத்துவும் ஷாக் ஆகி  இன்னைக்கு தான் உருப்படியான வேலை செஞ்சிருக்கா, இப்படி நீ முதல் செய்திருந்தா அவன் இப்போதைக்கு வேலைக்கு போய் இருப்பான் என அண்ணாமலை சொல்லுகிறார்.


அந்த நேரத்தில் ரோகிணியும் அங்கு வந்து எல்லோரும் சீரியஸான விஷயம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போல என சொல்ல, அவர் மீதும் பாய்கிறார் விஜயா. உங்க அப்பா கிட்ட காசு வாங்கி கொடுக்கலாம் தானே சொல்ல, உங்களுக்கு தானே எங்கட சிட்டுவேஷன் தெரியும் என ரோகினி சமாளிக்கிறார். ஆனாலும் அப்ப உங்க அப்பா வெளியே வந்த பிறகு வாங்கி கொடு என சொல்லுகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி முழித்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் ஸ்ருதி பைக்கில் செல்ல, அவரது வண்டியை மறைத்து கார் ஒன்று நிற்கிறது. அதில் ஸ்ருதிக்கு அவரது அப்பா முதல் பார்த்த மாப்பிள்ளை, அவர் நீ இப்ப ரவி கூட இல்லையாமே, இப்ப கூட ஓம் சொல்லு உன்ன ராணி மாதிரி வச்சு பார்த்து கொள்ளுகிறேன் என சொல்லி அவரிடம் தகராறு பண்ணுகிறார். இதை அடுத்து அவருக்கு கன்னத்தில் அறைந்த ஸ்ருதி அங்கிருந்து செல்லும் போது அவர் கைகளை பிடித்து அவரை காருக்குள் இழுக்க முயற்சிக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த முத்து ஓடி வந்து விச்சுவை அடித்து புரட்டி எடுக்கிறார். இவன் தான் ஏற்கனவே உனக்கு ஆசிட் அடிக்க வந்தவன் தானே என ஸ்ருதியிடம் கேட்க, ஸ்ருதியும் ஆமாம் என்று சொல்லுகிறார். அதற்கு பின் அவரை அடித்து விரட்டி விட்டு நீ ஏன் இன்னும் வீட்டுக்கு வராமல் இருக்கிறா, நீ வரலன்னு ரவியும் இன்னும் வீட்டுக்கு வராம இருக்கிறான். என் மேல எவ்வளவு என்றாலும் கோவப்படு ஆனா ரவி பாவம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

இன்னொரு பக்கம் மனோஜ் மீண்டும் பார்க்கிங் ஏரியாவுக்கு சென்று அங்கு அவரது நண்பரை வரவழைத்து, அவரிடமும் பணம் கேட்கிறார். ஆனால் அவர் 20 ஆயிரம் ரூபாய்க்கு நீ என்ன இந்த சென்னை முழுதும் சுத்த வச்ச, இப்ப 14 லட்சம் கேட்கிறாயா என சிரிக்கிறார். ஆனாலும் தான் ஒரு சாமியாரிடம் கூட்டிச் செல்கிறேன். அவர் உன்ட விதியை மாற்றுவார் என அங்கு கூட்டி செல்கிறார். 

அங்கு போன மனோஜ் அங்கிருந்தும் அவர் சொல்வதற்கு எல்லாம் எதிர் பேச்சு பேச, உனக்கு இந்த ஜென்மத்துல  நல்லது நடக்கவே நடக்காது என அவர் பேசி கிளம்ப,  இல்லை என அவரை சமாதனம் செய்து சாமியாரிடம் செல்வதற்காக லைனில் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

இந்த சீரியலின் நாளைய எபிசோட்டில் மனோஜ் கோவில் வாசலில் இருந்து பிச்சை எடுப்பதாக காட்டப்படுகிறது. அந்த கோவிலுக்கு மீனா வருவது போலவும் காட்டப்படுகிறது. மீனா அவரைப் பார்த்துவிட்டு கீழே இறங்கி வருவது போல காட்டப்படுகிறது. எனவே பிச்சை எடுக்கும் மனோஜை மீனா கண்டுபிடிப்பாரா வீட்டுக்கு இந்த விஷயம் தெரியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement