• Apr 23 2026

தெறிக்கவிடும் ரன்வீர் சிங்கின் ஆக்ஷன்! வெளியானது 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படத்தின் ட்ரெய்லர்

shali / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் அதிரடியான ஆக்ஷன் கதைகளில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த வருடம் டிசம்பரில் வெளியானது, வெளியீட்டுக்குப் பிறகு அதிகளவான வசூலை குவித்து, ரசிகர்களிடையே வெற்றிப் பயணத்தை தொடங்கியது. 


நடிகர்கள் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம், அதிரடி காட்சிகள் மற்றும் திருப்புமுனைகள் நிறைந்த கதை அமைப்பால் பாராட்டுகளை பெற்றது.

‘துரந்தர்’ படத்தின் வெற்றியால், இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் தயாரிப்பாளர் குழு தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். அதன்படி, அதிரடி ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் மாபெரும் திருப்புமுனைகளை கொண்ட ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த புதிய படத்தின் முக்கிய அம்சம், இது பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளதாகும். குறிப்பாக, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு, அதிக ரசிகர்கள் குழுவை கவரும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லர் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கதையின் சஸ்பென்ஸ் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement