• Oct 26 2024

'டெவில்ஸ் கிச்சன்' எனப்படும் குணா குகையின் இதுவரை யாரும் அறியாத பின்னணி? இயக்குநர் பலே ஆளு தான்..!!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

'குணா குகை' என்பது தான் கடந்த சில தினங்களாக பார்க்கும் இடமெல்லாம் கேட்கும் ஒற்றை வரியாக காணப்படுகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் படமும் அது படமாக்கப்பட்ட விதமும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக காணப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில், குணா குகையில் ஒரு பாறையின் இடுக்கில் உண்மையில் என்னதான் நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

கேரளா மாநிலம் கொச்சி அருகே இருக்கும் சின்னஞ்சிறு கிராமத்தில் 11 பேர் கொண்ட நண்பர்கள் குழு அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அப்படி ஒரு முறை கோவாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு பின் அது தோல்வியில் முடிய, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்த போது இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் குணா குகை வரை சென்று வரலாம் என்று நண்பர்கள் குழுவில் ஒருவர் கூற, குகையின் முகப்புக்கு சென்று சேர்கின்றனர் அந்த நண்பர்கள் குழு.

1991 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 'டெவில்ஸ் கிச்சன்' என்று அழைக்கப்பட்ட குகை, நடிகர் கமல்ஹாசனின் குணா படம் அதில் படமாக்கப்பட்டதற்கு பிறகு குணா குகை என்றே அழைக்கப்பட்டது.


பார்க்கவே வியப்பை ஏற்படுத்தும் டெவில்ஸ் கிச்சன் என்றும் அழைக்கப்படும் குணா குகையின் ஆபத்தை உணராமல் அதில் நுழைந்த பலரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலத்தை கூட மீட்க முடியாத அளவுக்கு ஆபத்தை கொண்டுள்ளது. 

அந்த குகையில் தடுப்புகளை தாண்டி நுழைந்துள்ளார்கள் இந்த நண்பர்கள் குழு. படத்தில் இடம்பெற்றது போன்றே உள்ளே சென்று விளையாட்டு தனமாக சுற்றிப் பார்த்தபோது கண்களுக்கு தெரியாமல் இருந்த பொந்துக்குள் கனநொடிகள் விழுந்து காணாமல் போகிறார் சுபாஷ்.

இந்த நண்பர்கள் குழுவில் சுபாஷ் எப்போதுமே சுட்டித்தனமாக இருப்பதும் அவ்வப்போது ஒளிந்து கொண்டு ஏமாற்றுவதும் வழக்கமாக வைத்திருந்த நிலையில், இதுவும் விளையாட்டாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். 


சில மணி நேரம் மௌனத்திற்கு பிறகு தான் உண்மை தெரிய வந்தது கிட்டத்தட்ட குணா குகையின் மையப்பகுதிகள் சுமார் 600 அடி ஆழத்தில் சிக்கி கிடக்கிறார் நண்பர்களில் ஒருவர்.

நவம்பர் மாதம் மழைக்காலம் என்பதால் ஏற்கனவே இருந்த குகை மேலும் இருளால் சூழ, போலிசாரிடம் சென்று சில நண்பர்கள் முறையிட்டுள்ளனர். அப்போது காவலர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

எனினும், குகைக்கு வந்து பார்த்துவிட்டு இதுவரை இங்கு வந்து விழுந்தவர்கள் யாரும் பிழைத்ததில்லை இவனும் பிழைக்க மாட்டார் என்று கூற, நீண்ட நேரத்திற்கு பிறகு அவர் உள்ளே இருப்பது தெரிய வரவும் பிறகு கீழே இறங்க முற்படுகின்றனர்.

அன்று மழையும் வெளுத்து வாங்கியதால் குறிப்பிட்ட அந்த குகை  பொந்துக்குள் மழை நீர் ஓடிய நிலையில், படத்தில் இடம்பெறுவது போன்றே நீரை திசைமாற்ற நண்பர்கள் கீழே படுத்து செயற்படுகிறார்கள்.


மீட்பு படை வீரர்களும் என்னால் முடியாது என்று கை விரிக்க, என் நண்பன் தானே நானே மீட்கிறேன் என்று முன் வருகிறார் நண்பர்களில் ஒருவரான குட்டன்.

இவரது பாத்திரம் குட்டன் என்று வடிவமைக்கப்பட்டிருக்கும். டார்ச் லைட்டை மாட்டிக் கொண்டு கடுமையான இடுக்குகளை கொண்ட குகைக்குள் கைக்கு எட்டிய தூரத்தில் பாறை மீது விழுந்து கிடந்த சுபாஷை பார்க்கிறார்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தன் தோளோடு தோள் கட்டி நண்பனை மேலே கொண்டு வருகிறார். படத்தில் காட்டப்பட்டது போல அத்தனை பேரும் கயிறு இழுக்க தெரிந்தவர்கள் என்பதால் ஒருவழியாக நீண்ட நேரத்திற்கு பிறகு இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள். அதன்பின் அவர்கள் அனைவரும் பல நாள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.

2008 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு பிறகு, மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 11 பேர் கொண்ட இந்த நண்பர்கள் குழு மீண்டும் கொடைக்கானல் வரை சென்று வந்துள்ளனர். 


மஞ்சும்மல் பாய்ஸ் படப்பிடிப்பின் போது கடந்த வருடம் இவர்கள் மீண்டும் குணா குகைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 25 பேர் இந்த குகைக்குள் விழுந்து உயிரை விட்ட நிலையில், சுபாஷ் விழுந்து மீட்கப்பட்ட பிறகு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் செய்தியாக கூறப்பட்டது. இப்படியாக நடந்த உண்மை சம்பவத்தையே திரில்லர் காட்சிகளுடன் படமாக்கி பார்வையாளர்களின் நெஞ்சில் கவனத்தை ஈர்த்து  இருக்கிறார் படத்தின் இயக்குனர் சிதம்பரம்.  

Advertisement