• Feb 25 2025

நடிகர் பிரபுதேவாவுடன் சேர்ந்து ‘ரவுடி பேபி’ பாடலுக்கு ஆடிய தனுஷ் – வைரலாகும் வீடியோ!

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாஸ் பாடலான ‘ரவுடி பேபி’ பாடல் வெளியானதிலிருந்து இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்த இடத்தில் காணப்படுகிறது. இப்பாடல் வெளியாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது அந்தப்  பாடலுக்கு நடனமாடிய வீடியோ  வைரலாகி வருகின்றது.

தற்பொழுது நடிகர் தனுஷ் மற்றும் சிறந்த நடனக் கலைஞரான பிரபுதேவா உடன் இணைந்து ‘ரவுடி பேபி’ பாடலுக்கு ஆடிய வீடியோ இணையத்தில் சூடு பிடித்து வருகிறது. ரசிகர்கள் இதை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.


சமீபத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில், தனுஷும் பிரபுதேவாவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பின்னர் அந்நிகழ்ச்சியில் ரவுடி பேபி பாடலை ஒலிக்கச் செய்து அதற்கு தனுஷும் பிரபுதேவாவும் இணைந்து  டான்ஸ் ஆடி உள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்த வீடியோ வைரலானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த வைரல் வீடியோ மூலமாக, ரவுடி பேபி மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு மீள்பிறப்பு கண்டிருக்கிறது. தனுஷின் சாதாரண ஸ்டைல், பிரபுதேவாவின் மாஸான ஸ்டெப்ஸ் இந்த இரண்டு காம்பினேஷனும் சமூக வலைதளங்களை பதற்றமடைய செய்திருக்கிறது.




Advertisement

Advertisement