• Dec 26 2024

சூர்யா ரசிகர்களுக்கு சப்ரைஸ் நியூஸ்! கங்குவா டீசரில் வரப்போகும் அந்த விடயம்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கடைசியாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தான் திரையில் வெளியானது. அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக சூர்யாவின் திரைப்படம் திரையில் வெளியாகவில்லை. 


சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் தான் கங்குவா. திஷா பதானி நாயகியாக நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகின்றது. கிட்டத்தட்ட பத்து மொழிகளில் இப்படத்தை வெளியிடவும் படக்குழு முடிவெடுத்துள்ளது. முதல் முறையாக சூர்யா பான் இந்திய படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


இந்நிலையில் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது. ஆனால் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை பொறுத்து தான் இப்படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யமுடியும் என தனஞ்சயன் கூறியுள்ளார். ஆனால் அநேகமாக கங்குவா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த படத்தின் டீசர் வெளியாகும் பொது திரைப்படம் ரிலீசாகும் திகதியும் அறிவிக்கப்படவுள்ளது. 

Advertisement

Advertisement