தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் மற்றும் சமூக விழிப்புணர்வு கொண்ட படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் பா. ரஞ்சித். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது கடினமான ஒரு செயலாக மாறிவிட்டதாக கருத்துத் தெரிவித்தார்.
தற்பொழுது ஒரு படத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் அதை திரையரங்குகளில் வெளியிடுவதும் மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது. குறிப்பாக, சமூக உணர்வுப்பூர்வமான கதைகளை கொண்ட படங்களை வெளியிட விரும்பும் இயக்குநர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பா. ரஞ்சித் இந்த விவகாரத்தை பற்றி பேசும்போது, "நாம் பெரும்பாலும் அனைத்து மொழிப் படங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குறிப்பாக சமூக உணர்வுப்பூர்வமான படங்களுக்கு திரையரங்குகளில் இடமில்லை என்பது வருத்தமளிக்கிறது. பல சர்வதேச திரைப்படங்கள் எளிதில் வெளியாகின்றன, ஆனால் நம்முடைய சொந்த மொழிப் படங்கள் வெளிவர சிக்கலான சூழ்நிலை உள்ளது" என்று கூறினார்.
பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இயக்குநர். சமூக நீதி மற்றும் பழமையான சமூக அமைப்புகளின் தாக்கம் போன்ற விஷயங்களை திரைப்படங்களில் மையமாக கொண்டு கதைகள உருவாக்குவார். அவர் இயக்கிய அட்டகத்தி , கபாலி மற்றும் காலா என்பன முக்கிய திரைப்படங்களாக காணப்படுகின்றன.
பா. ரஞ்சித், தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையைப் பற்றி கூறும்போது, "சில பெரிய தயாரிப்பு நிறுவனங்களே திரையரங்குகளை கட்டுப்படுத்துகின்றன என்றார். இது குறும்பட இயக்குநர்கள் மற்றும் புதிய முயற்சியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும் நமது சொந்த மொழிப் படங்களுக்கு நம்முடைய திரையரங்குகளில் இடம் கிடைக்காமல் போவது வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.
Listen News!