• Apr 07 2026

இந்த வார்த்தைகள் 1000 விருதுகளுக்கு சமம்! ரசிகை அழுது பாராட்டியதை பகிர்ந்த ஜி.வி. பிரகாஷ்!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியான ஹேப்பி ராஜ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஜார்ஜ் மரியான், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தை திரையரங்கில் படம் பார்த்த ரசிகை ஒருவர் அழுதுகொண்டே ஜி.வி. பிரகாஷை கட்டிப்பிடித்து பாராட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ரசிகை, "படத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எல்லோரும் அப்பாவை இருக்கும்போதே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்" என்று உணர்வுபூர்வமாக பேசி உள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த ஜி.வி. பிரகாஷ், "இந்த வார்த்தைகள் 1000 விருதுகளுக்கு சமம்" என்று பதிவிட்டுள்ளார்.


இயக்குநர் மாரி செல்வராஜும் படத்தை பாராட்டி, "வெறும் கொண்டாட்டமாக இருக்கும் என்ற என் எண்ணத்தை உடைத்த உணர்ச்சிமிக்க படைப்பு" என்று வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.

ஹேப்பி ராஜ் திரைப்படம் வணிக ரீதியாக மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் மனதை வென்று வெற்றி நோக்கி நகர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement