• Dec 27 2024

மன்னிப்புக் கேட்டு கூட்டிட்டு வந்தாங்க, எனக்கு அது தான் நிரந்தரம் - மீண்டும் விஜய்டிவிக்கு வந்ததன் காரணத்தை உடைத்த விஜே பாவனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையிலுள்ள தொகுப்பாளினிகளில் மிகவும் முக்கிமானவர் தான் விஜே பாவனா.சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1  எனப் பல ரியாலிட்ரி ஷோக்களைத் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர். இவர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து ஹோஸ்ட் செய்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் 6-வது சீசன் வேறலெவலில் ஹிட் அடித்தது.

தொடர்ந்து திருமண பந்தத்தில் இணைந்ததோடு விஜய் டிவியிலிருந்து விலகி ஸ்டார் ஸ்போர்ட் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கடமையாற்றத் தொடங்கினார். இதில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் .


இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை  தொகுத்து வழங்க களமிறங்கியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ ஸ்டார் ஸ்போர்ட்ஸில் இருந்து விலகிவிட்டீர்களா என கேள்வி எழுப்பி வந்தார்கள். எனவே இதற்கு விஜே பாவனா விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பதிவில், “6 வருஷம் ஆகிடுச்சு, உங்கள் கடிகாரத்தை ரீவைண்டு செய்ய வேண்டிய நேரம் இது. இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பாருங்கள். அதில் 3 எபிசோடுக்கு மட்டும் கெஸ்ட் ஹோஸ்ட் ஆக நான் மீண்டும் திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. என்னை சமாதானப்படுத்தி திருப்பி அழைத்து வந்த சூப்பர் சிங்கர் டீமுக்கு நன்றி.


 இந்த மேடை நிரந்தரம் அல்ல தற்காலிகமானது தான். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொடங்கி உள்ள கபடி தான் என்னுடைய முக்கியமான வேலை” என குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாவனா.



Advertisement

Advertisement