• Dec 26 2024

கண்ட கண்ட இடத்தில் அட்ஜெஸ்ட் பண்ணிக்க சொல்லுறாங்க, ரொம்ப கஷ்டமாக இருக்கு- மனம் நொந்து பேசிய அம்மு அபிராமி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை அம்மு அபிராபி.இவர் ராட்சசன் மற்றும் அசுரன் படங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானார்.இப்படங்களைத் தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில்,கண்ணனி படத்தில் நடித்திருந்த இவர் அண்மையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு பேட்டியளித்திருந்தார்.அதில், "பல கோடி போட்டு திரைப்படம் எடுக்கிறார்கள், ஆனால் நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில்லை".


"சில திரைப்படங்களில் நான் பணியாற்றும் போது அங்கு பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெளி இடங்களில் ஷூட் செய்யும் போது அட்ஜெஸ்ட் பண்ணிக்க சொல்கின்றனர்".

"கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், எனக்கு இன்பெக்சன் ஆகிவிட்டது இந்த மாதிரியான விஷயங்களை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இதெல்லாம் ஷூட்டிங் தளத்தில் இருக்க வேண்டிய அடிப்படை உரிமை தானே" என்று அம்மு அபிராமி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement