• Dec 26 2024

நடிகர் விஷ்ணுகாந்த் இரண்டாவது திருமணம் செய்து விட்டாரா?- பொண்ணு யார் தெரியுமா?- வைரலாகி வரும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி-யின் சிப்பிக்குள் முத்து சீரியலில் அபினவ் என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் விஷ்ணுகாந்த். இவர் அதே சீரியலில் பொன்னி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த சம்யுக்தாவைக் காதலித்து வந்தார்.

பின்னர் இந்த ஆண்டு மார்ச் மாதம் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.இருப்பினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.


அத்தோடு தொடர்ந்து இருவரும் கெரியரிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். சம்யுக்தா, முத்தழகு என்னும் சீரியலில் சுவேதா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.விஷ்ணுகாந்த் தெலுங்கு சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் விஷ்ணுகாந்த் மணமகன் கோலத்தில்,நடந்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள்,விஷ்ணுகாந்த் உங்களுக்கு இரண்டாவது திருமணமா என்று கேட்டு வருகின்றனர். ஆனால் இது தெலுங்கு சீரியலுக்காக எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement