• Dec 25 2024

ஓவர் பில்டப் கொடுத்து இருக்காங்க.. சொர்க்கவாசல் படத்திற்கு செய்யாறு பாலு விமர்சனம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சித்தாத் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சொர்க்கவாசல். இந்த படத்தில் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், நட்டி சானியா ஐயப்பன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் சொர்க்கவாசல் படம் பற்றி செய்யாறு பாலு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 1999 ஆம் ஆண்டு மத்திய சிறையில் ரவுடி பாஸ்கர் வடிவேலுவின் மரணம் அதன் பின்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

d_i_a

குறித்த சிறைச்சாலையில் சிகா என்ற ரவுடியை பார்த்து எல்லாரும் பயப்படுறாங்க. ஒட்டுமொத்த சிறையும் அந்த ரவுடியின் கண்ட்ரோல்ல தான் இருக்கு.  அந்த சிறைக்கு சூழ்நிலை கைதியாக பாலாஜி வருகின்றார். ஒரு பக்கம் ரவுடி சிகா. இன்னொரு பக்கம் அப்பாவியான ஆர்.ஜே பாலாஜி. இவர்கள் இருவருக்கும் நடக்கும் கதையை மையமாகக் கொண்டுதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தில் செல்வராகவன் சிகா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பயத்தை தரவில்லை. சிறைச்சாலையே சிகாவை பார்த்து பயப்படுகிறது என்று ஓவர் பில்டப் கொடுத்து இருக்காங்க. ஆனால் வில்லன் கேரக்டருக்கான அழுத்தம் செல்வராகவரிடம் மிஸ் ஆகி உள்ளது.

இந்த படத்திற்கு பெரிய நடிகர்கள் கிடைக்காததால் ஆர்.ஜே பாலாஜியை வைத்து முயற்சி செய்துள்ளார் இயக்குனர். அந்த முயற்சி நன்றாக வந்திருக்கின்றது. இதில் சிறப்பாக நடித்தவர்கள் கருணாஸ் மற்றும் நட்டியை சொல்லலாம். மேலும் இந்த படத்தின் ஆர்ட் டெக்கரேஷன் நன்றாக இருந்தது. நிஜமான ஜெயிலா அல்லது செட்டா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு நன்றாக இருந்தது. இந்த படத்தை பார்த்தவர்கள் இது சொர்க்கவாசலா நரகவாசலா என்பதை முடிவு செய்யட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement