• Dec 25 2024

தமிழ் சினிமாவின் பணக்கார காதல் தம்பதி இவர்கள் தான்!சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதல், திருமணம் செய்து கொண்ட சில பிரபலமான ஜோடிகள் உள்ளனர்.அஜித் ஷாலினி ,நயன்தாரா விக்னேஷ் சிவன் போன்றவர்களில் குறிப்பாக, சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் மிகுந்த கவனம் ஈர்த்த ஜோடியாக பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்தனர், பின்னர் ‘காக்க காக்க’ படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தபோது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, பல தடைகள் தாண்டி 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.


இன்று, இந்த ஜோடி கோலிவுட்டில் வலம் வரும் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பொருளாதார ரீதியாகவும் உறுதியாக நிலைத்துள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு மொத்தம் ₹537 கோடியை எட்டியுள்ளது. இதில், சூர்யாவின் சொத்து மதிப்பு ₹206 கோடி என்றும், ஜோதிகாவின் சொத்து மதிப்பு ₹331 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த ஜோடி தற்போது தமிழ் சினிமாவில் அதிக பணத்தினை சேமித்து வைத்துள்ள ஜோடியாக வலம்வருவதாக தகவல்கள் பரவியுள்ளன.

Advertisement

Advertisement