• Dec 25 2024

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்! தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக காணப்பட்டவர் தான் டெல்லி கணேஷ். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமானார்.

1976 ஆம் ஆண்டு வெளியான பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நாடக நடிகராக இருந்து திரைப்படங்களுக்கு வந்துள்ளார். டெல்லி கணேஷ் நடிகராக மட்டும் இல்லாமல் சிறந்த டப்பிங்  கலைஞராகவும் திகழ்ந்து வந்தார். இவருடைய மகனும் தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றார்.

d_i_a

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக காணப்படும் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் குணச்சித்திரம், நகைச்சுவை உள்ளிட்ட கேரக்டர்களிலும் நடித்து மக்களை மகிழ்வித்துள்ளார்.


இந்த நிலையில், டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு சுமார் 11:30 மணி அளவில் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழக்கும் போது அவருக்கு 80 வயது என கூறப்படுகின்றது. இவருடைய மரணம் தற்போது தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த டெல்லி கணேஷின் இறுதிச் சடங்குகள் நாளைய தினம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இவருடைய மரணம் அறிந்த பலரும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement