• Dec 26 2024

இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் மீனா.. ஸ்ருதிக்கும் டவுட்டு வந்துடுச்சு! முத்து ஹாப்பி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், மனோஜ் ரோகினியும் ஸ்வீட் கொடுத்து தமது பிசினஸ்ல நிறைய சேல்ஸ் ஆயிருக்கு என்று சொல்லுகின்றார்கள். ஆனால் விஜயா குழந்தையை பற்றி பேசுகின்றார். அந்த நேரத்தில் மீனா விஜயாவுக்கு டீ எடுத்துக் கொண்டு வருகின்றார்.

மீனாவுக்கும் ஸ்வீட் கொடுக்கின்றார் ரோகினி. அதன்பின் விஜயா மீனாவை கூப்பிட்டு டீ கேட்டா காபி போட்டு கொண்டு வாரியா என்று சொல்ல, அவர் டீ தான் போட்டேன் என சொல்லுகிறார். ரோகிணியை கூப்பிட்டு குடிக்க சொல்ல, அவரும் காபி என்று சொல்லுகிறார். இதனால் மீனாவை திட்டி அனுப்புகின்றார்.

இதைத்தொடர்ந்து ரவியும் ஸ்ருதியும்  வந்து முத்து இப்படி ஒரு விஷயம் பண்ணத ஏன் எங்களிடம் சொல்ல இல்ல? என கேட்க, அவர் என்ன பண்ணினார் என்று மீனா கேட்டுக் கொண்டிருக்கும் போது அண்ணாமலையும் விஜயாவும் வருகின்றார்கள். அவர்களும் முத்து என்ன பண்ணினான் என கேட்க, மனோஜ் நக்கலாக பேசுகின்றார்.

என்ன விஷயம் என்று ரவி சொல்ல ஆரம்பிக்க, கழுத்தில் மாலையுடன் ஸ்வீட்டோடு என்ட்ரி கொடுக்கிறார் முத்து. அதாவது பிரசவ வலியில் இருந்த ஒரு பெண்ணுக்கு பாதியில் வலி வந்ததாகவும் மார்க்கெட்டில் காரை நிறுத்தி அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக பிரசவம் பார்த்து பெண் குழந்தை பிறந்ததாகவும் அந்த குழந்தையை முதல் முதலில் தன்னிடம் கொடுத்ததாகவும் தனது அனுபவத்தை சொல்லி கலங்குகின்றார் முத்து. இதனால் விஜயா வெளியில் நல்லது நடக்குது இந்த வீட்டில் தான் ஒரு குழந்தை சத்தமும் கேட்கல என சொல்லுகின்றார்.


அந்த நேரத்திலும் மீனா ரோகினியை பார்த்து அதிர்ச்சியாகி நிற்க, விஜயா ரோகினியிடம் நீதான் முதலில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல, பாத்திரத்தை கீழே போட்டு விடுகின்றார் மீனா. இதனால் அவளுக்கு வயித்தெரிச்சல் என விஜயா சொல்லுகின்றார். அதற்கு முத்து பதிலடி கொடுக்கின்றார்.

அதன் பின் முத்து அவரைக் கூப்பிட்டு இணையத்தில் போடப்பட்ட கமெண்ட்ஸ்களை காட்ட அவர் ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் நிற்கின்றார். என்ன நடந்தது என்று கேட்கவும் ஒன்றும் இல்லை என செல்கின்றார். 

பிறகு கிச்சனுக்கு வந்த ஸ்ருதி, ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள் என மீனாவிடம் துருவி துருவி கேட்க, அவர் இறுதியில் ரோகினி பற்றிய விஷயங்களை சொல்லி விடுகின்றார். இதனால் ஸ்ருதி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இன்றைய எபிசோட் யும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

Advertisement

Advertisement