• Dec 27 2024

எனது இசைக்கு தொடர் தோல்வி.. தனியாக ரூமுக்குள் அழுதேன்! யுவன் ஓபன் டாக்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக காணப்படுபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மயங்காத ரசிகர்களே  இருக்க முடியாது. இவர் தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

1997 ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர்தான் யுவன் சங்கர் ராஜா. இதில் சரத்குமார் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைக்கும் போது யுவன் சங்கர் ராஜாவுக்கு 15 முதல் 17  வயதிற்குள் தான் இருக்குமாம். ஆனாலும் இவருடைய முதல் படத்தில் இவருடைய இசை பெரிதாக கவனிக்கப்படவில்லை.

அதன்பின்பு இவருக்கு பெயரை பெற்று கொடுத்த படம் என்றால் அது பூவெல்லாம்  கேட்டுப்பார். இன்று வரை அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் எவர் க்ரீனாக ஒழித்துக் கொண்டுதான் உள்ளன.


இதைத்தொடர்ந்து யுவன் இசைத்த மெட்டுக்கள் எல்லாமே ஹிட் கொடுத்தன. இளையராஜா, ரகுமான், வித்தியாசாகர், கார்த்திக் ராஜா, தேவா என பலரும் தங்களுடைய பெஸ்ட் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் யுவன் சங்கர் ராஜா மிக எளிமையாகவே தனது இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார்.

தற்போது கோட் படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.  இதுவரை மூன்று பாடல்கள் வெளியான போதும் அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

இந்த நிலையில், பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவன் பேசும் போது, நான் ஆரம்பத்தில் இசையமைத்த பாடல்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைத்த பாடல்கள் அத்தனையுமே தோல்வி அடையும் என முத்திரை குத்தினார்கள். இதை பொறுத்துக் கொள்ளாமல் தனி அறையில் கதவை மூடிக் கொண்டு அழுதேன். பிறகு எங்கே தவறு நடக்கிறது என கவனித்து மீண்டும் இசையமைக்க தொடங்கினேன் முழு கவனத்தை செலுத்தி தற்போது இங்கு நிற்கின்றேன்.

நாம் நடந்து கொண்டே தான் இருக்க வேண்டும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் உங்களை வீழ்த்துவதற்கு முயன்று கொண்டு இருப்பார்கள் அதற்கு நீங்கள் செவி சாய்க்க கூடாது அனைத்தையும் கடந்து வர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement